இந்தியா

மீட்புக் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

DIN

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்டது உணர்ச்சிபூர்வமானது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பிரதமர் மோடி பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும் வலிமையும் ஊக்கம் அளிக்கிறது. தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் குறிப்பிடுள்ளார். 

மேலும் உத்தரகண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணிகள் தொடர்பாக மாநில முதல்வரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் இன்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கதில் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆனதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 

மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தொழிலாளர்களுக்கு அங்கு தாயர் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

தொழிலாளர் குடும்பத்தினர் உணர்ச்சிப்பெருக்குடன் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டனரா என்பதையும், வெளியே வந்த தொழிலாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற ஆவலுடன் நலம் விசாரித்தபடியும் இருந்தார்கள். சுமார் 15 நாள்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் வெற்றி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் 41 தொழிலாளர்கள் வெளியே பத்திரமாக திரும்ப வேண்டும் என்று செய்த பிரார்த்தனை நிறைவேறியிருக்கிறது.

மோசமான வானிலை, சுரங்கத்தின் கடுமையான பாறை போன்ற சவால்களுக்கு மத்தியில் மீட்புக்குழு அவர்கள் அனைவரையும் மீட்டுள்ளது. உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT