கோப்புப் படம். 
இந்தியா

சுரங்க மீட்பு: குழாய்க்குள் சென்றது என்டிஆர்எஃப் குழு

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க குழாய்க்குள் என்டிஆர்எஃப் குழு சென்றுள்ளது. 

DIN

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க குழாய்க்குள் என்டிஆர்எஃப் குழு சென்றுள்ளது. 

தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்கான சூழல் தற்போது உள்ளதா என என்டிஆர்எஃப் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் சூழல் குறித்து என்டிஆர்எஃப் குழு அய்வு செய்து தெரிவித்த உடனே தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளனர். 

தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவக்குழுக்கள், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் குழாய் பதிக்கும் பணி முடிந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. 

மீட்புப்பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் ஏற்பட்ட இந்த தாமதத்தால் உறவினர்கள் கவலையில் உள்ளனர். உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT