சுரங்கத்துக்கு வெளியே தயார் நிலையில் சினூக் ராணுவ ஹெலிகாப்டர். 
இந்தியா

உத்தரகண்ட்: தயார் நிலையில் சினூக் ராணுவ ஹெலிகாப்டர்!

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மீட்புப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. 

DIN

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மீட்புப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் சுரங்கம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த நவ. 12 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கினர். 

கடந்த 17 நாள்களாக சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளா்களை மீட்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

துளையிடும் பணி, குழாய் அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலுதவி குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக சுரங்கத்திலேயே 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில்  நவீன மருத்துவ வசதிகளுடன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு மருத்துவ நிபுணர்களும் தயாராக உள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக ராணுவ ஹெலிகாப்டரான சினூக் தயார் நிலையில் சுரங்கத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது. சின்யாலிசூர் விமானப் பாதையில் ஹெலிகாப்டர் தயாராக உள்ளது.

கடந்த 2015ல் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர், விரைவாக செல்லக்கூடியது, குறுகலான பள்ளத்தாக்குகளில்கூட தரையிறங்கக் கூடியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

SCROLL FOR NEXT