கோப்புப்படம் 
இந்தியா

உ.பி. சிறுமியை ஹைதராபாத்திற்கு கடத்திச் சென்று வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஹைதராபாத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு ஒருவார காலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

ஹைதராபாத் : உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடத்தப்பட்ட சிறுமியை அந்த இளைஞர் ஹைதராபத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் நவ. 18 ஆம் தேதி நடந்துள்ளது.

இந்த நிலையில், சிறுமி கடத்தப்பட்டது தொடர்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், கடத்தப்பட்ட சிறுமி ஹைதராபத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கு சென்ற போலீஸார், நவ. 25ஆம் தேதி சிறுமியை மீட்டனர்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் சிறுமியை அடைத்துவைத்து, கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி  அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், சிறுமியை கடத்திச்சென்ற 19 வயதான இளைஞர் ஹைதராபாத்தில் நேற்று (நவ. 27) கைது செய்யப்பட்டார். போக்ஸோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தசரா: பரேலியில் ட்ரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு! இணைய சேவைகள் துண்டிப்பு!

புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!

தங்கம் விலை உயர்வு! இன்று மாலை நிலவரம்!

அதிவேகமாக 50 விக்கெட்டுகள்... டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!

ஜாவா சுந்தரேசன் எனப் பெயரை மாற்றிக்கொண்ட சாம்ஸ்!

SCROLL FOR NEXT