முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங்
பகிர்:

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வீட்டில் புதன்கிழமை காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் உள்ள சஞ்சய் சிங் வீட்டில் கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை தில்லி அரசு அமல்படுத்தியது. அதன்படி, தனியார் நிறுவனங்களுக்கு மதுபான கடை உரிமம் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை விசாரித்த அமலாக்கத்துறை தில்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →