நாளை ராஜஸ்தான், ம.பி.க்குச் செல்கிறார் பிரதமர் மோடி!
தனது அரசியல் சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடி வியாழக்கிழமை(அக்.5) ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார்.
தனது அரசியல் சுற்றுப்பயணங்களைத் தொடர்ந்து பிரதமர் மோடி வியாழக்கிழமை(அக்.5) ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்குச் செல்கிறார்.
ஜோத்பூரில் வியாழக்கிழமை காலை 11.15 மணியளவில் சுகாதாரம் மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த திட்டங்களில் ஐஐடி ஜோத்பூர் வளாகமும் அடங்கும், அதேநேரத்தில் நகர விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையக் கட்டடத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், பிற்பகல் 3.30 மணியளவில் ம.பி.யில் ஜபல்பூரை சென்றடையும் அவர் ரூ.12,600 கோடி மதிப்பிலான தேச வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், மாண்ட்லா, ஜபல்பூர், திண்டோரி, சியோனி ஆகிய மாவட்டங்களில் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களையும் அவர் தொடங்கிவைக்கிறார்.
இந்த இரு மாநிலங்களுக்கும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.