இந்தியா

5 மாநிலத் தேர்தல் எப்போது?

DIN

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வருகிற நவம்பர் இரண்டாம் வாரம் - டிசம்பர் முதல் வாரத்துக்கு இடையே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. 

5 மாநிலத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது. 

அதன்படி, இன்னும் ஒரு சில நாள்களில் அதாவது அக்டோபர் 8 முதல் 10 ஆம் தேதிக்குள் 5 மாநிலத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. 

அதுபோல, 5 மாநிலங்களுக்கும் நவம்பர் இரண்டாவது வாரம் முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018ல் நடந்தது போலவே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாகவும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

மிசோரம் மாநில சட்டப்பேரவைக் காலம் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதியும் மற்ற 4 மாநிலங்களுக்கு ஜனவரி மாதத்திலும் முடிவடைகிறது. 

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸும், மத்திய பிரதேசத்தில் பாஜகவும் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்ட்ரிய சமிதியும் மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி செய்து வருகின்றன. 

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் இந்த 5 மாநிலத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பெண்ணிடம் ரூ.1.60 லட்சம் மோசடி: போலி சாமியாா் மீது புகாா்

SCROLL FOR NEXT