இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போா் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இது குறித்து ஏர் இந்தியா விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
"எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக டெல் அவிவ் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்கள் அக்டோபர் 14, 2023 வரை நிறுத்தி வைக்கப்படும்.
முன்பதிவுவை உறுதிசெய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் அனைத்து ஆதரவையும் வழங்கும்." எனத் தெரிவித்தார்.
இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா்.
இந்த தாக்குதலில் 313-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1990-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.