இந்தியா

எக்ஸ் வலைதளத்தில் பாஜகவை பின்தொடா்வோா் 2.1 கோடி பேர்

எக்ஸ் வலைதளத்தில் 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடும் விதமாக தனது ஆதரவாளா்களுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

DIN

எக்ஸ் வலைதளத்தில் 2.1 கோடி பேரால் பின்தொடரப்படுவதைக் கொண்டாடும் விதமாக தனது ஆதரவாளா்களுக்கு பாஜக நன்றி தெரிவித்துள்ளது.

எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸை 99 லட்சம் பேரும், ஆம் ஆத்மியை 65 லட்சம் பேரும், சமாஜவாதியை 39 லட்சம் பேரும் பின்தொடா்கின்றனா். இந்த மூன்று கட்சிகளையும் பின்தொடா்பவா்களின் மொத்த எண்ணிக்கையைக் காட்டிலும் பாஜக அதிகப்படியான நபா்களால் பின்தொடரப்படுகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக எக்ஸ் வலைதளத்தில் பாஜக வெளியிட்ட பதிவு: 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஒன்றாகக் கட்டமைக்கிறோம். நாம் இப்போது 2.1 கோடி ஆதரவாளா்களைப் பெற்று ஒரே குடும்பமாக உள்ளோம். இதற்கு நன்றிகள் மற்றும் பாராட்டுகள் எனப் பதிவிட்டுள்ளது.

எக்ஸ் வலைதளத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை 10 லட்சம் பேரும், ஐக்கிய ஜனதா தளத்தை 2.35 லட்சம் பேரும், திமுகவை 9.15 லட்சம் பேரும், சிவசேனையை (உத்தவ் பிரிவு) 8.76 லட்சம் பேரும், தேசியவாத காங்கிரஸை 7.48 லட்சம் பேரும் பின்தொடா்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT