இந்தியா

தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது: அனுராக் தாக்குர்

தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.

DIN

தேர்தலை பாஜக தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்த வேண்டும். என்டிஏ.வையும் பலப்படுத்த வேண்டும். பாஜக அமைப்புக் கூட்டங்களை நடத்தி 2024 தேர்தலுக்கான வியூகங்களைத் தயாரித்து வருகிறது. 

ஒவ்வொரு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலும் எங்களுக்கு முக்கியம். நாங்கள் முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைப் பார்த்தால், பல எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

இது, நாங்கள் தேர்தலில் போட்டியிடும் தீவிரத்தை காட்டுகிறது. வெற்றி பெறவே நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் தாங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதாக யாரும் கூற முடியாது. நரேந்திர மோடி அரசின் கீழ், ஏழைகள் பல திட்டங்களின் பலன்களைப் பெற்றுள்ளனர் என்றார். 

மிசோரம், சத்தீஸ்கர் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக இதுவரை அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியலில் நான்கு மத்திய அமைச்சர்கள் உட்பட 18 எம்.பி.க்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்பு

தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை! உச்ச நீதிமன்ற தீா்ப்பின் முக்கிய அம்சங்கள்!

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

SCROLL FOR NEXT