மும்பை விமான நிலையத்தில் கொகைன் போதைப்பொருளுடன் 3 ஆப்பிரிக்க பெண்கள் கைது!
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5.68 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை சானிட்டரி நாப்கின்களில் மறைத்து கடத்தி வந்த 3 ஆப்பிரிக்க பெண்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.
மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5.68 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை சானிட்டரி நாப்கின்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்று ஆப்பிரிக்க பெண்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.
குறிப்பிட்ட உளவுத்துறையின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு மும்பை பிரிவு கடந்த மூன்று நாட்களாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
சானிட்டரி நாப்கின்களில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளுடன் இரண்டு உகாண்டா நாட்டினர் பிடிபட்டனர். அதே நேரத்தில் தான்சானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கோகோயின் கொண்ட காப்ஸ்யூல்களை உட்கொண்டதாக தெரிவித்தார் அந்த அதிகாரி.
மூவரும் போதை மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்பு தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை உட்கொள்வதன் மூலம் மறைத்து வைத்தனர் கடத்தல்காரர்கள். ஆனால் இந்த முறை கண்டுபிடிப்பதைத் தவிர்ப்பதற்காக சானிட்டரி நாப்கின்களுக்குள் மறைத்து வைத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.