இந்தியா

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி 29% அதிகரிப்பு!

இணையதள செய்திப்பிரிவு

இந்தியாவில் பாமாயில் இறக்குமதி கடந்த 11 மாதங்களில் 29% அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா(SEA) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-23 எண்ணெய் ஆண்டில் (நவம்பர் - அக்டோபர் என்பது எண்ணெய் ஆண்டு)  கடந்த 11 மாதங்களில் நாட்டில் பாமாயில் இறக்குமதி வெகுவாக அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. 

இதன்படி, கடந்த 2022 நவம்பர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான 11 மாதங்களில் 29.2% (90.8 லட்சம் டன்) அதிகரித்துள்ளது. 

உள்நாட்டில் போதுமான அளவு சமையல் எண்ணெய் கிடைக்கும் நிலையிலும் பாமாயில் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும் இதற்கு பாமாயில் விலையில் எந்த மாற்றமும் இல்லாதது(விலை அதிகரிக்காதது) காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது உள்நாட்டு சுத்திகரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளது. 

அதுபோல, இந்தியாவில் கடந்த நவம்பர் - செப்டம்பரில் வெஜிடபிள் ஆயில் இறக்குமதி 20% (156.73 லட்சம் டன்) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 130.13 லட்சம் டன்னாக இருந்துள்ளது. அதேநேரத்தில் செப்டம்பரில் மட்டும் வெஜிடபிள் ஆயில் இறக்குமதி 5% (15.52 லட்சம் டன்) குறைந்துள்ளதாகக் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT