இந்தியா

வாரிசு அரசியலிலிருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

வாரிசு அரசியல், ஊழலில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

DIN

வாரிசு அரசியல், ஊழலில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க பாஜகவால் மட்டுமே முடியும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட பிறகு கே சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். ஆனால் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டனர். அவர்கள் மாநிலத்தை கொள்ளையடித்துள்ளனர். தெலங்கானாவுக்கு எதுவும் செய்யவில்லை. 
மாநிலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் மோடி செய்துள்ளார். தெலங்கானா மக்கள் காங்கிரஸின் வாரிசு அரசியலை விரும்பவில்லை. பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதையும் அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தெலங்கானாவில் மாற்றத்தை விரும்புகிறார்கள். 1997 முதல் தெலங்கானா கோரிக்கையை ஆதரித்து வரும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. எனவே, மாற்றத்தின் முகவராக நாங்கள் இருக்கிறோம். 
தெலங்கானாவை வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து என்றென்றும் விடுவித்து, மாநிலத்தில் வளர்ச்சி மற்றும் செழிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்சி பாஜக. இவ்வாறு அவர் கூறினார். தெலங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

டிஆர்டிஓ-இல் ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

SCROLL FOR NEXT