தில்லியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவு
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.
புதுதில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது..
தேசிய நில அதிர்வு மைய தகவலின் படி, ஹரியாணா, பரிதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது.
அதன் தாக்கம் காரணாக தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது.
இந்த நடுநக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.