இந்தியா

ராஜஸ்தானில் கார்கே இன்று உரை!

ராஜஸ்தானின், பாரான் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் உரை நிகழ்த்த உள்ளார். 

DIN

ராஜஸ்தானின், பாரான் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் உரை நிகழ்த்த உள்ளார். 

நவம்பர் 25-ம் தேதி ராஜஸ்தானில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சித் தலைவர்கள் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ராஜஸ்தானில் பாரான் மாவட்டத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டம் ஒன்றில் கார்கே உரை நிகழ்ந்த உள்ளார். 

கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம்(இஆர்சிபி) விவகாரத்தில் மாநிலம் முழுவதும் பெரியளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசாரத்தைக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 

இஆர்சிபி திட்டத்திற்குத் தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி மாநிலத்திற்கு வருகைதந்தபோதும் கட்சித் தலைவர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, தற்போது இதுகுறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளதாக மூத்த தலைவர்கள் தெறிரவித்தனர். 

முதல்வர் அசோக் கெலாட், மாநிலப் பொறுப்பாளர் சுக்ஜந்தர் ரந்தாவா, மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் ஸ்ரீசாணாத்தியம்மன் கோயில் நவராத்திரி நிறைவு

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்: கட்சியினா் மரியாதை

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஏற்கனவே இருந்தவா்களுக்கு கடைகள்: நகா்மன்றத் தலைவா் உறுதி

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT