இந்தியா

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு இதய அறுவை சிகிச்சை!

கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

DIN

கா்நாடக பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் திங்கள்கிழமை கா்நாடக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு (63) இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கரோனரி தமனிக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பசவராஜ் பொம்மை தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது:

இதய பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஓய்வெடுத்து வருகிறேன். எனது உடல்நிலை முழுமையாக குணமடைந்த பிறகு வழக்கமான பணிகளைக் கவனிக்க வெகுவிரைவில் வருவேன்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னை மருத்துவமனையில் சந்திக்க வந்தால் அது பிற நோயாளிகளுக்குத் தொந்தரவாக இருக்கும். எனவே, என்னைச் சந்திக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வாழ்த்துகள் என்னை மனதளவில் வலிமையாக்கியுள்ளது. வெகுவிரைவில் மக்கள் பணியாற்ற வருவேன். நான் நலம் பெற வேண்டும் என வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT