இந்தியா

கோதுமை விலை கடும் உயர்வு!

DIN


நாட்டில் கோதுமை விலை கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு  அதிகரித்துள்ளது. 

விழாக்காலத்தையொட்டிய அதிக தேவை, குறைந்தபட்ச விநியோகம், இறக்குமதி வரி உள்ளிட்டவைகளால் கோதுமை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. 

அரிசியைப் போன்று கோதுமையும் முதன்மை நாட்டின் உணவாக உள்ளது. இதனிடையே கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு கோதுமை விலை தற்போது அதிகரித்துள்ளது. 

ஆயுதபூஜை, தீபாவளி போன்று அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் கோதுமையின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் குறைந்த அளவு இருப்பு, அதிகப்படியான இறக்குமதி வரி போன்றவையே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்குவதால், இருப்புகளை சந்தைக்கு கொண்டுவருவதன் மூலமும், கோதுமை மீதான 40% இறக்குமதி வரியைக் குறைப்பதன் மூலமும் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

தில்லியில் கோதுமை விலை 1.6% அதிகரித்து ஒரு மெட்ரிக் டன் ரூ.27,390ஆக விற்பனையாகிறது. இது கடந்த பிப்ரவரி மாதத்தை ஒப்பிடும்போது 22% அதிகமாகும். 

நடப்பாண்டில், இந்திய விவசாயிகளிடமிருந்து 34.15 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 26.2 மில்லியன் டன் கோதுமையே பெற முடிந்தது. இதனால் இருப்பும் வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT