சொமேட்டோ தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் 
இந்தியா

இந்தூர் இளம்பெண் வைரல் விடியோ! சொமேட்டோ நிறுவனர் விளக்கம்!!

பயனர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் சேவையை ஸொமேட்டோ நிறுவனம் வழங்கி வருகிறது. 

DIN


இந்தூரில் இளம்பெண் ஒருவர் உணவு விநியோகம் செய்வதைப்போன்று சமூக வலைதளத்தில் பரவிய விடியோவுக்கு சொமேட்டோ நிறுவனர் பதிலளித்துள்ளார். 

பயனர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் சேவையை ஸொமேட்டோ நிறுவனம் வழங்கி வருகிறது. 

இதனிடையே சொமேட்டோ உடை அணிந்தவாறு, விலையுயர்ந்த அதிநவீன இரு சக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் உணவு விநியோகம் செய்வதைப்போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. தலைக்கவசம் அணியாமல், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு மாடல் அழகியைப்போன்ற தோற்றத்தில் அப்பெண் இருப்பதால், பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

உண்மையில் சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரிகிறாரா? ஸொமெட்டோ நிறுவனத்தின் வியாபார யுக்தியா? விளம்பர தேடலா? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், இந்த விடியோவுக்கு சொமேட்டோ நிறுவன தலைமை செயல் அதிகாரி தீபிந்தர் கோயல் பதிலளித்துள்ளார். இளம்பெண்ணின் விடியோவைக் குறிப்பிட்டு, நாங்கள் இவ்வாறு எதையும் செய்யவில்லை. தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்ட நாங்கல் அனுமதிப்பதில்லை. இந்தூரில் நிறுவனத்தை விளம்பரப்படுத்த தலைமைப் பொறுப்புகள் ஏதும் இல்லை.

அவர் தனது விருப்பத்திற்கேற்ப அவ்வாறு செய்வது, எங்கள் நிறுவனத்துக்காக யாரோ ஒருவர் இலவச விளம்பரம் செய்கிறார் என்பதைப்போல் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், ஒரு பெண் உணவு விநியோகம் செய்வதில் தவறு ஏதுமில்லை. தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்காக நாள்தோறும் உணவு விநியோகம் செய்யும் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் எங்கள் நிறுவனத்தில் உள்ளனர். அவர்களின் பணியால் நாங்கள் பெருமைகொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT