இந்தியா

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!

DIN

தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் பின்னர் அக். 21 ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதனால் கேரள மாநிலத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனிடையே, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், அக். 20 ஆம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT