ராகுல் காந்தி 
இந்தியா

அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார் மோடி: ராகுல் கடும் தாக்கு

இந்திய தொழிலதிபர் அதானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

PTI

புது தில்லி: இந்திய தொழிலதிபர் அதானிக்கு, பிரதமர் நரேந்திர மோடி கையொப்பமிட்டு பிளாங்க் செக் கொடுத்திருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

புது தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாகச் செல்கிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, அரசின் அனைத்து துறைகளில் இருந்தும் அதானிக்கு பங்கு செல்கிறது. மத்திய அரசு அதானிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ன? 

அதானியின் நிலக்கரி இறக்குமதி விலையில் ஏற்பட்ட பணவீக்கத்தை சரி செய்யவே, சாமானிய மக்களின் மின்சாரச் செலவு அதிகரித்து வருகிறது என்றார்.

மேலும், இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி அதனை இந்தியாவில் இரண்டு மடங்கு விலைக்கு விற்கிறார் அதானி என்று கூறியிருக்கும் ராகுல், நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் மிகப்பெரிய மோசடி செய்வதாகவும்,  அதிக விலைக்கு அதனை இந்தியாவுக்கு விற்று ரூ.12,000 கோடியை பறித்ததாக ஊடகங்களில் வெளியான அறிக்கையை மேற்கோள்காட்டி பேசினார் ராகுல் காந்தி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT