இந்தியா

மகாகாளேஷ்வர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு!

உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

DIN

உஜ்ஜைனியில் உள்ள மகாகாளேஷ்வர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைனி மாவட்டத்தில் அமைந்துள்ளது மகாகாளேஸ்வர் திருக்கோயில். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக விளங்கும் இந்த திருக்கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இக்கோயிலுக்குச் சென்றுள்ளார். 

தமிழக ஆளுநர் தன் மனைவியுடன் இன்று காலையில் பஸ்ம ஆரத்தியில்(காலை ஆரத்தி)கலந்துகொண்டார். இக்கோயிலில் பஸ்ப ஆரத்தி புகழ்பெற்றதாகும். அதிகாலை 3 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் கோயிலின் நந்தி மண்டபத்தில் நடைபெறும். 

ஆரத்தி பூஜைக்குப் பின்னர் ஆளுநர் தன் மனைவியுடன் கோயிலின் கருவறைக்குச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தார். 

கோயில் நிர்வாகிகள் குழு தமிழக ஆளுநரை சிறப்பாக வரவேற்று அவரை கௌரவித்து, சுவாமி மகாகாளேஷ்வரரின் படத்தையும் பரிசாக வழங்கினர். 

இக்கோயிலுக்குப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவ்வப்போது வருகை தருவது வழக்கமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT