மிசோரம்: ஆத் ஆத்மியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
மிசோரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 4 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரிவ் லால்ரெம்கிமா ஐஸ்வால் வடக்கு IIIயிலிருந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வன்லால்மாவியா, வான்சாவ்ங், பியாக்தியாங்லிமா மற்றும் லால்கைஹாவ்மா பச்சாவ் ஆகியோர் ஐஸ்வால் மேற்கு 1, ஐஸ்வால் மேற்கு III மற்றும் ஐஸ்வால் தெற்கு I ஆகிய இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
மிசோரமில் நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.