மஹுவா மொய்த்ரா (கோப்புப் படம்) 
இந்தியா

அவதூறு வழக்கிலிருந்து பின்வாங்கிய மஹுவா மொய்த்ரா வழக்குரைஞர்!

பாஜக எம்.பி.க்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து அவரின் வழக்குரைஞர் வாதாட மறுத்து பின்வாங்கினார். 

DIN


பாஜக எம்.பி.க்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தொடர்ந்த அவதூறு வழக்கிலிருந்து அவரின் வழக்குரைஞர் வாதாட மறுத்து பின்வாங்கினார். 

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக மஹுவா மீது பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஜெய் ஆனந்த்  தேஹத்ராய் ஆகியோர் குற்றம் சாட்டினர். இந்தற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் இருவர் மீதும் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து மஹுவா மொய்த்ரா வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் விலகுவதாகத் தெரிவித்து விலகினார். இந்த வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இது தொடர்பாக பேசிய வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், இது தொடர்பாக எதையும் பேசவிரும்பவில்லை. முன்பு ஜெய் ஆனந்திடம் பேசினேன். இது தொடர்பாக எதையும் பேசவில்லை. பின்னர் இந்த வழக்கில் நான் ஆஜராவதற்கு ஜெய் ஆனந்த் மறுப்பு தெரிவித்தார். அதனால் இன்று இந்த வழக்கிலிருந்து விலகினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT