கோப்புப் படம் 
இந்தியா

50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை!

50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

DIN

நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல்முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்த நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த் குமார் ஆகியோர் நாடு முழுவதும் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து வேதனையை வெளிப்படுத்தினர்.

பல நீதிமன்றங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதை நாங்கள் வேதனையுடன் கூறுகிறோம். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் சில வழக்குகள் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 

சட்ட செயல்முறை நத்தை வேகத்தில் நகர்ந்தால் மனுதாரர்கள் ஏமாற்றம் அடைவார்கள். அதனால் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது. 

நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க 11 அம்சங்கள் கொண்ட விரிவான வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படுகிறது. நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வழக்கறிஞர் அமைப்புகள் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விரைவான விசாரணையை உறுதிசெய்யவும், தீர்ப்பைக் கண்காணிக்கவும் உயர் நீதிமன்றங்களுக்கு 11 அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கண்காணிக்கும் குழுக்களை அமைக்க உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

பாக்கியலட்சுமி சீரியலின் கடைசி வார டிஆர்பி எவ்வளவு தெரியுமா?

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 4 பேர் பலி..12 பேர் மாயம்!

மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!

ரொனால்டோவின் நம்பிக்கை... வெற்றி ரகசியம் பகிர்ந்த சிராஜ்!

SCROLL FOR NEXT