முகப்பு
இந்தியா

மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்!

மணிப்பூரில் உள்ள வாங்கூ லைபாம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை காக்சிங் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:13 AM
கோப்புப் படம்.
பகிர்:

மணிப்பூரில் உள்ள வாங்கூ லைபாம் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை காக்சிங் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக வன்முறை நடைபெற்று வருகின்றது. இந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் தீக்கிரையாகினர். 

இந்த நிலையில், வாங்கூ லைபாம் மலைப்பகுதியில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், சில ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட பொருள்களில் ஒரு ஏ.கே 47, 5 எஸ்எல்ஆர், ஒரு 303 ரைபிள், கைக்குண்டுகள், சீன கைக்குண்டு, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பைப் வெடிகுண்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். 

மீட்கப்பட்ட பொருள்கள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு, மேலதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →