இந்தியா

கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.776 கோடி வருவாய்

DIN

புது தில்லி: நாடு முழுவதும் தேங்கியிருந்த உலோகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசு 3 ஆண்டுகளில் ரூ.776 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சிறப்புத் தூய்மைப் பிரச்சாரங்களில் உலோகக் கழிவுகளை அகற்றியதன் மூலம் மத்திய அரசு ரூ.776 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

இந்த வருவாயில் பெரும் பகுதி அதாவது, ரூ.176 கோடி, தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தூய்மை பிரசாரத்தின் கடந்த 20 நாள்களில் ஈட்டப்பட்டுள்ளது என்றார்.

இந்தியாவின் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பிரசாரத்தின் மூன்றாம் வாரத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் இங்கு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், கடந்த மூன்று வாரங்களில் கழிவுகளை அகற்றிதன் மூலம், கிட்டத்தட்ட 86 லட்சம் சதுர அடி அலுவலக இடம் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம், "கழிவிலிருந்து செல்வம்" என்ற கருத்து பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT