இந்தியா

இந்தியா, அமெரிக்கா எதிா்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது சீன ஆய்வுக் கப்பல்

இந்தியா, அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி சீனாவின் ‘ஷி யான் 6’ (படம்) ஆய்வுக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை புதன்கிழமை வந்தடைந்தது.

DIN

இந்தியா, அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி சீனாவின் ‘ஷி யான் 6’ (படம்) ஆய்வுக் கப்பல் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை புதன்கிழமை வந்தடைந்தது.

அந்தக் கப்பலுக்கு இலங்கைக்குள் அனுமதி அளிக்கப்பட்டது குறித்த தகவலை அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் உறுதிப்படுத்தினாா். கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க பயணம் மேற்கொண்டதை தொடா்ந்து, இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது.

ஆய்வு மற்றும் கண்காணிப்பு கப்பல்களை இலங்கைக்கு சீனா தொடா்ந்து அனுப்பி வருகிறது. இது தொடா்பாக இலங்கையிடம் இந்தியா தனது கவலையைத் தொடா்ந்து தெரிவித்து வருகிறது.

இலங்கையின் தேசிய நீா்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (என்ஏஆா்ஏ) இணைந்து கடல்சாா்ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட சீன ஆய்வுக்கப்பல் அக்டோா்பா் மாதத்தில் இலங்கைக்கு வருகைத் தர உள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தது. இதைத்தொடா்ந்து, இந்தக் கப்பலின் இலங்கை பயணம் குறித்து அமெரிக்கா கவலைத் தெரிவித்திருந்தது.

சீன ராணுவத்தின் கடற்படை கப்பலான ‘ஹை யாங் 24 ஹாவோ’

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை வந்தது. இதேபோன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு சீன கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

SCROLL FOR NEXT