கோப்புப்படம் 
இந்தியா

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. 

DIN

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. 

நேற்று(அக். 27) முகேஷ் அம்பானிக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.  அதில் 'நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களைக் கொன்றுவிடுவோம். இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள்' என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

இதுகுறித்து முகேஷ் அம்பானி தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர் ஷதாப் கான் என்பது தெரிய வந்துள்ளது.

மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் பிரிவு 387, 506 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

SCROLL FOR NEXT