இந்தியா

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

காற்று மாசுபாட்டைக் குறைக்க மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

DIN

அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா தில்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அப்போது அவர் கூறியதாவது: “காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. தில்லிக்கு சுமார் 70 சதவீத காற்று மாசு தில்லியைச் சுற்றியுள்ள பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தே வருகின்றன. 

தற்போது தில்லியில் உள்ள அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு மட்டுமே பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் தில்லியில் காற்றின் தரம் 30 சதவீதம் முன்னேற்றம் கண்டுள்ளது.” இவ்வாறு ரீனா குப்தா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT