இந்தியா

கேரளா: பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்!

DIN

கேரளா எர்ணாகுளத்தில் அரசு அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் பட்டதாரிகள் குவிந்தனர்.

இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

மாதம் ரூபாய் 23,000 சம்பள கிடைக்கக் கூடிய வேலையில் இணைய இன்னுமொரு தகுதியாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பொறியியல் பட்டதாரிகள், இளங்கலை தொழில்நுட்ப பட்டதாரிகள் (பி.டெக்) என பலர் குவிந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது நடைமுறையில் மிதிவண்டிகளில் செல்ல வேண்டியது இல்லையெனினும் இன்னும் மாற்றப்படாத விதிமுறைகளால் இந்தத் தகுதியும் அளவுகோலாகப் பார்க்கப்படுகிறது.

கவர்ச்சியான சம்பளம் இருப்பினும் அழுத்தம் தரக்கூடிய தனியார் கம்பெனி வேலைகளுக்கு மாற்றாக பட்டதாரி இளைஞர்கள் அரசு பணியையே தேர்வு செய்கின்றனர்.

மிக அடிப்படை நிலையான அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் பட்டதாரிகள், இளங்கலை தொழில்நுட்ப பட்டதாரிகள் (பி.டெக்) ஆகியோர் குவிந்தது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த வேலைக்கான முதல்நிலை தேர்வான மிதிவண்டி ஓட்டுவதில் 101 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறம் மாறும் உலகில்

ரஜத் படிதார் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 188 ரன்கள் இலக்கு!

அல்ஜீப்ரா காதலி! ஐஸ்வர்யா தத்தா..

தீராத உறவுகளின் அற்புதம் இது!

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

SCROLL FOR NEXT