கேரள குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு!
கேரளாவில் ஞாயிற்றுக் கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதியை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார்.
கேரளாவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
கேரளாவில் மதவழிபாட்டுக் கூட்டரங்கில் அடுத்தடுத்து மூன்று முறை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி என 3 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: காஸாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!
Advertisement
Advertisement
இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உள்பட பல புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். ‘டிபன் பாக்ஸ்’ வழியாக இந்த குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (அக்டோபர் 30) ஆய்வு செய்தார். முன்னதாக காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த களமச்சேரி மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.