இந்தியா

அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்படுவார்: தில்லி அமைச்சர்

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்படுவார் என தங்களுக்குத் தகவல்கள் வருவதாக தில்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார். 

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் வரும் நவம்பா் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகக்கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை நேற்று (திங்கள்கிழமை)நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம், கேஜரிவாலை அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியிருந்த நிலையில் முதல்முறையாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி கல்வித்துறை அமைச்சருமான அதிஷி, 'தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறை முன்பாக ஆஜராகும்போது அவர் கைது செய்யப்படுவார் என்று எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. 

பாஜகவும் பிரதமர் மோடியும் ஆம் ஆத்மியை ஒழிக்க நினைக்கிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி, கேஜரிவாலைப் பார்த்துப் பயப்படுவதால் அவர் கைது செய்யப்படுவார். அவர் மீது வழக்கு இருப்பதால் அல்ல. 

மேலும் தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பது பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றாகத் தெரியும். அதனால், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வர அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து பெரிய தலைவர்களையும் அவர்கள் சிறையில் அடைப்பதன் நோக்கம் ஆம் ஆத்மி கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே' என்று கூறியுள்ளார். 

அதுபோல, எங்கள் கட்சியின் தலைவர்கள் சிறைக்குச் செல்ல பயப்படவில்லை என்றும் எங்கள் கட்சியை முடிவுக்கு கொண்டு வரவே மத்திய அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் தற்போது கேஜரிவாலை சிறையில் அடைக்க முயற்சி செய்வதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சௌரப் பரத்வாஜ் கூறியுள்ளார். 

தில்லி கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்த சில மணி நேரங்களில் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நாலாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 96 தொகுதிகள் யார் பக்கம்?

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சென்னையில் 99.30% தேர்ச்சி

ஸ்டார் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

SCROLL FOR NEXT