இந்தியா

ஒடிசாவின் 26வது ஆளுநராக ரகுவர் தாஸ் பதவியேற்பு!

ஒடிசாவின் 26வது ஆளுநராக ரகுவர் தாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். 

DIN

ஒடிசாவின் 26வது ஆளுநராக ரகுவர் தாஸ் இன்று பதவியேற்றுக் கொண்டார். 

ஒடிசா உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி ரகுவர் தாஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஆளுநராகப் பதவியேற்பதற்கு முன் தாஸ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் லிங்கராஜ் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தாஸ், ஒடிசாவின் புதிய ஆளுநராக கடந்த அக்டோபர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார். 

முன்னதாக ஒடிசா ஆளுநராக இருந்த கணேஷி லாலுக்குப் பதிலாக ரகுவர் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

2014 முதல் 2019 வரை ஜார்க்கண்டின் முதல் பழங்குடியினர் அல்லாத முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிரந்தர ஒளி... கேப்ரியல்லா!

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT