இந்தியா

2024-ல் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3,000-ஆக உயரும்! அபிஷேக் பானர்ஜி

DIN

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் சிலிண்டரின் விலை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். 
மேற்கு வங்க மாநிலம், செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் தூப்குரி இடைத்தேர்தலையொட்டி இன்று நடந்த பேரணியில் அவர் பேசியதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம். தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.3000 ஆக உயர்த்தப்படும். ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும். 
இது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி. எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் மறக்க மாட்டோம். இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். டிசம்பர் 31க்குள், தூப்குரியை துணைப் பிரிவாக மாற்றுவோம். இது தொடர்பாக முதல்வரிடம் பேசுவேன் என்றார். மத்திய அரசு சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.200 குறைத்தது. 
தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பேரவைத் தோ்தல்களும் அடுத்த ஆண்டில் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கவுன்சிலா்கள் தொடா் அமளி : தில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு

ஏப்ரலில் பணவீக்கம் குறைந்ததால் ஏறுமுகம் கண்ட பங்குச்சந்தை!

பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது: தில்லி காங். குற்றச்சாட்டு

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் டிடிஇஏ பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்

ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் விவகாரம்: கட்சி மேலிடம் கடுமையான நடவடிக்கை எடுக்கும்

SCROLL FOR NEXT