இருக்கும் பிரச்னையில் 30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கும் அரசு
கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் அரசு, 30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாஇருக்கும் பிரச்னையில் 30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கும் அரசு
கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் அரசு, 30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கும் அரசு, தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும் இக்கட்டான நிலையில், 30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில அமைச்சர்களுக்காக, பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் என்ற தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள 33 கார்களை வாங்கியிருக்கிறது.
இதையும் படிக்க.. ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, 33 கார்களை வாங்குவதற்கு ரூ.10 கோடி செலவாகும் நிலையில், அதற்கு ஒப்புதலையும் வழங்கியுள்ளார்.
முழுக்க முழுக்க எத்தனால் எரிபொருளில் இயங்கும் இந்த வகை மாடல் கார் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கார்களை வாங்குவதற்கு கர்நாடக அரசு ஒப்பந்தம் கோரியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் முழுக்க வறட்சி மற்றும் பொருளாதார பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஆளும் காங்கிரஸ் அரசு, அதிக விலை கொடுத்து கார்களை வாங்க முடிவு செய்திருப்பதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.