உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுமேரு மலைப் பகுதியில் இன்று நிகழ்ந்த பனிச்சரிவால் பரபரப்பு காணப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாத் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குப் பின்னால் உள்ள சுமேரு மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. இருப்பினும், பனிச்சரிவு காரணமாக எந்த சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பனிச்சரிவால் கேதார்நாத்தில் நிலைமை சாதாரணமாக உள்ளது, சரஸ்வதி நதியின் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் கூறினார்.
பனிச்சரிவு என்பது மிகப்பெரிய அளவில் பனி அல்லது பனிக்கட்டி மலைப்பகுதி ஒன்றின் மீது வேகமாக விழும் நிகழ்வைக் குறிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.