இந்தியா

உத்தரகண்டில் அதிகரிக்கும் டெங்கு: ரத்த தானம் செய்ய வேண்டுகோள்!

உத்தரகண்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு மக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளது. 

DIN

உத்தரகண்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில், ஆங்காங்கு தேங்கியிருந்த வெள்ள நீரால் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வருகின்றது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாநிலத்தில் டெங்கு பாதிப்பு 600ஐத் தாண்டியுள்ளது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹரித்வார், உத்தம் சிங் நகர் மற்றும் டேராடூன் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், உத்தரகண்ட் மாநில சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் குமார் டேராடூனில் உள்ள கரோனேஷன் மருத்துவமனையை இன்று ஆய்வு செய்தார். டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசினார். மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தை காலை 8 மணிக்கு திறக்குமாறு அறிவுறுத்தினார். 

மேலும், மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், சிகிச்சை பெற வருவோருக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்படுவதால் பொதுமக்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT