முகப்பு
இந்தியா

 திருப்பதியில் நடிகர் ஷாருக் கான் வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான் செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்தார்.
 இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள "ஜவான்' திரைப்படம் செப்.7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
 இதையொட்டி, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஷாருக் கான், அவரின் மகள் சுஹானா கானுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.
 வெள்ளை குர்தா, பைஜாமா உடையில் வந்த அவர், கோயில் முன்பகுதியில் உள்ள கொடிமரத்தை முதலில் வழிபட்டார். பின்னர் ஏழுமலையானை தரிசித்தார்.
 அவருடன் நயன்தாரா, அவரின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கோயிலில் வழிபட்டனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →