ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் 
இந்தியா

சாதிய பாகுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட மோகன் பாகவத் பேச்சால் சர்ச்சை

சமூகத்தில் பாகுபாடு இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என பாகுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பேச்சால் குறிப்பிட்ட பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

DIN

சமூகத்தில் பாகுபாடு இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என பாகுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பேச்சால் குறிப்பிட்ட பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களின் கேள்விக்கு அளித்த பதிலளித்த மோகன் பாகவத், 

சமூக கட்டமைப்பில் சக மனிதரை கீழ்நிலையில் வைத்துள்ளோம். அவா்கள் குறித்து நாம் கவலைப்படுவதில்லை. இது கடந்த 2,000 ஆண்டுகளாக இந்த பாகுபாடு தொடா்கிறது. அவா்களுக்குச் சமஉரிமையை வழங்க சில சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. சமூகத்தில் இது போன்ற பாகுபாடுகள் நிலவுகிற வரை, இடஒதுக்கீடு தொடர வேண்டும். பொருளாதாரம் அல்லது அரசியல் சமநிலைக்காக இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது. அவர்களுக்கு சமத்துவம் அளிக்கப்படும் வகையில் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். அரசியலமைப்பு சாசனம் அளித்துள்ள இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தார். 

மகாராஷ்டிரத்தில் மராத்திய சமூகத்தினா் இடஒதுக்கீடு கோரி தொடா் போராட்டம் நடத்தி வரும்நிலையில், கண்ணுக்கு தெரியாத நிலையில் சமூகத்தில் பாகுபாடு நிலவுகிறது என சமூகத்தில் சாதிய பாகுபாடு இருப்பதை ஒப்புக்கொண்ட மோகன் பாகவத் பேச்சால் குறிப்பிட்ட பிரிவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT