அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை மற்றொரு நிஜாம் என்று தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டி கடுமையாக சாடியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள நெக்லஸ் சாலையில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அவர், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு அளித்தது குறித்து ஒவைசியிடம் கேள்வி எழுப்பினார். ஹைதராபாத்தில் முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் எம்ஐஎம், தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து கேசிஆருக்கு ஆதரவாக இருந்து வருகிறது.
தந்தை மகன் இருவரும் மாநிலத்தை கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது. முஸ்லீம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு காங்கிரஸ் அரசு வழங்கியது. இந்த முறை காங்கிரஸ் எம்ஐஎம் தோற்கடிக்கும். ஒவைசி குடும்பம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.
மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள். பிரதமர் மோடியுடன் நிற்கும் கேசிஆருக்கு தெலங்கானா முஸ்லலீம்கள் இந்த முறை ஆதரவு அளிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.