தில்லி விமான நிலையத்தில் கனடா பிரதமரின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!
தில்லி விமான நிலையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுதில்லி: தில்லி விமான நிலையத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு விமானம் புறப்படவிருந்ததாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பிரதமர் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ட்ரூடோ வெள்ளிக்கிழமை தேசிய தலைநகர் புதுதில்லிக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.