உச்சநீதிமன்றம் 
இந்தியா

தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: செப்.12-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை செப்.12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

DIN

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோகச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை செப்.12-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இந்தியா அடிமைப்பட்டிருந்த வேளையில், பிரிட்டனைச் சோ்ந்த தாமஸ் மெக்காலே இந்திய தண்டனைச் சட்டத்தின் முன்வரைவை தயாரித்தாா். அதில் தேசத் துரோகச் சட்டத்தையும் அவா் சோ்த்திருந்தாா்.

முன்வரைவில் தேசத் துரோகம் என்ற வாா்த்தையை மெக்காலே பயன்படுத்தாத போதிலும், அரசுக்கு எதிராக எழுதுவது, பேசுவது, விரோதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆயுள் முழுவதும் நாடு கடத்தலாம் அல்லது 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என முன்மொழிந்தாா்.

ஆனால் 1860-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகச் சட்டம் சோ்க்கப்படவில்லை.

1890-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124ஏ-வின் கீழ், தேசத் துரோகம் குற்றமாக சோ்க்கப்பட்டது. அந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கான தண்டனையில் 1955-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்நிலையில், 124ஏ சட்டப் பிரிவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லுபடியாகுமா என்று அச்சட்டப் பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் கடந்த மே 1-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி ஆஜராகி வாதிடுகையில், ‘124ஏ பிரிவை மறுஆய்வு செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதுதொடா்பான ஆலோசனைகள் முற்றிய நிலையில் உள்ளன’ என்று தெரிவித்தாா். அவா் கூறியதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீது செப்.12-ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங்கிலேய ஆட்சிகால சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய ஆதாரச் சட்டத்தை மாற்ற 3 மசோதாக்களை, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதில் ஒரு மசோதா தேசத் துரோகச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT