ஸ்பெயின், துபை நாடுகளுக்கு செல்கிறார் மம்தா பானர்ஜி 
இந்தியா

ஸ்பெயின், துபை நாடுகளுக்கு செல்கிறார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் துபை நாடுகளுக்கு 11 நாள் அரசு முறைப்பயணமாக இன்று செல்கிறார்.

DIN


கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் துபை நாடுகளுக்கு 11 நாள் அரசு முறைப்பயணமாக இன்று செல்கிறார்.

செவ்வாயன்று, கொல்கத்தாவிலிருந்து துபைக்கு விமானம் மூலம் செல்லும் மம்தா பானர்ஜி, அங்கிருந்து ஸ்பெயின் செல்கிறார்.

ஸ்பெயின் தலைவர் மாட்ரிட்டில் மூன்று நாள்கள் தங்கியிருந்து, வணிக மாநாட்டில் கலந்து கொண்டு, மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பணிகளை மேற்கொள்கிறார்.

பிறகு அங்கிருந்து பார்சிலோனா சென்று, மேற்குவங்க, உலக வணிக மாநாட்டில் பங்கேற்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்றும், மத்திய அரசு, வெளிநாடு செல்ல தேவையான அனுமதியை இதுவரை வழங்காமல் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாட்ரிட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சௌரவ் வங்குலியும் மம்தா பானர்ஜியுடன் பங்கேற்கவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT