துபை விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு 
இந்தியா

நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? இலங்கை அதிபருக்கு மம்தா என்ன பதில் சொன்னார்?

நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். 

DIN

நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு சா்வதேச முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கும்பொருட்டு ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வா்த்தக மாநாடுகளை அந்த மாநில அரசு நடத்துகிறது.

அந்த மாநாடுகளில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி நேரடியாக பங்கேற்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இதற்காக செவ்வாய்க்கிழமை காலை அவா் தனி விமானத்தில் துபை புறப்பட்டுச் சென்றார். 

இந்நிலையில் புதன்கிழமை துபை விமான நிலையத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வர்த்தக உச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

அப்போது 'இந்தியாவில் அடுத்த தேர்தலில் நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா?' என்று ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதாகவும் அதன் சாத்தியத்தை மறுக்காத மம்தா பானர்ஜி 'தற்போது எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கிறேன். நாங்கள் அந்த நிலைக்கு வந்தால் அதுகுறித்து பார்ப்போம்' என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT