அன்னமயா (ஆந்திரப் பிரதேசம்) : ஆந்திரம் மாநிலம், அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் தெரிவித்தாவது:
ஆந்திரம் மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெத்தம்பள்ளி அருகே வெள்ளிக்கிழமை காலை வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை தொலைவு 4ஆவது முறையாக அதிகரிப்பு
காயமடைந்தவர்கள் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு திருப்பதி ரூவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பலியானவர்களில் இரண்டு பேர் ஆண்கள், மூன்று பேர் பெண்கள் என போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.