இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏ கைது: நூ மாவட்டத்தில் இணைய சேவை முடக்கம்!

ஹரியாணா, நூ வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுளளது. 

DIN

ஹரியாணா, நூ வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த மாவட்டத்தில் இரண்டு நாள்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுளளது. 

நூ மாவட்டத்தில் கடந்த ஜூலையில் நடைபெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலத்தின் மீது சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், அங்கு இரு சமூகத்தினரிடையே பெரிய அளவில் கலவரம் மூண்டது. பின்னா், குருகிராம் பகுதிக்கும் கலவரம் பரவிய நிலையில், 2 ஊா்க்காவல் படை வீரா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இந்த நிலையில், நூ வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறை சம்பவத்தில் கானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட எம்எல்ஏ கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

நூ மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இன்று காலை முதல் இரண்டு நாள்களுக்கு மொபைல் இன்டர்நெட் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் உள்பட இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குழந்தையின் உணவுக் குழாயில் சிக்கியிருந்த டாலா் அகற்றம்

கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளா் பணிக்கு தோ்வு: 1,921 போ் எழுதினா்

லஞ்சம்: தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT