இந்தியா

நீண்ட தலைமுடி வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சிறுவன்!

DIN

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 4 அடி நீளத் தலைமுடியைக் கொண்ட சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

கிரேட்டர் நொய்டாவில் சிடக்தீப் சிங் சாஹல்(15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட கூந்தல் இருந்தது. தன் பெற்றோரிடம் அவற்றை நீக்கிவிடும்படி சாஹல் பலமுறை கேட்டிருந்தார். 

ஆனால், அது வளர வளர அதன் மீது தனிக்கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். தலைமுடி தன்னில் ஒரு பகுதியாக நினைக்க ஆரம்பித்துவிட்டார். சீக்கிய மதத்தினை சேர்ந்த சாஹல் மத நம்பிக்கைகளுக்கு கௌரவம் சேர்க்க வேண்டி இதுவரை ஒருமுறையும் தலைமுடியை வெட்டியதில்லையாம். 

சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ அதாவது 4 அடி 9.45 அங்குலம். இந்த நிலையில், நீண்ட கூந்தலைக் கொண்ட சாஹல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

இதுபற்றிய விடியோ ஒன்றையும் கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் சாஹல் தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றிப் பேசியுள்ளார். தலைமுடி பராமரிப்பில் அவரது தாய் உதவியதாகவும், அவரால் முடியாத சமயத்தில் உருண்டையாக உருட்டி சீக்கிய முறைப்படி டர்பன் அணிந்துகொள்வதாகவும் அவர் கூறினார். 

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதால் சாஹல் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

SCROLL FOR NEXT