இந்தியா

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் காவிரி ஆணையத் தலைவர் சந்திப்பு!

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.  

DIN

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க உத்தரவு!
 

இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்திக்கவுள்ளது. 

இதற்கு முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி. ஷர்மா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். 

இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சரிடம், ஆணையத் தலைவர் எடுத்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு வருகிற செப். 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

மலராட்டம்... ராஷி சிங்!

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT