முகப்பு
இந்தியா

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 19 செப்டம்பர், 2023 at 2:50 PM
பகிர்:

வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று மேற்கு வங்கம், ஒடிசா கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாள்களுக்குள் மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா - தெற்கு ஜார்கண்ட் நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.