பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: பிரதமருக்கு நன்றி தெரிவித்த தில்லி மகளிர் பிரிவு!
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பாஜக மகிளா மோர்ச்சாவின் தில்லி பிரிவு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியதற்காக பாஜக மகிளா மோர்ச்சாவின் தில்லி பிரிவு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மகிளா மோர்ச்சா தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ரயில் பவன் மற்றும் நாடாளுமன்ற கட்டடத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 இடங்களில் ஒன்று கூடி, நாட்டின் பெண்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவித்தனர் எனத் தில்லி பிரிவு தலைவர் ரிச்சா பாண்டே கூறினார்.
பல ஆண்டுகளாகத் தடைகளை எதிர்கொண்ட மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என்று அவர் கூறினார்.